தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கழுகுமலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அண்ணா புதுதெருவை சேர்ந்தவர் மாரிமுத்து வயது (வயது 32). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி பிரபா (27). மாரிமுத்துவிற்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாலும், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் பிரபா கோபித்துக்கொண்டு தனது தாய் ஊரான கரடிகுளத்திற்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story