தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆற்காட்டில் மனைவி தாய் வீட்டுக்கு சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் உஸ்மான் ஷரீப் (வயது 35), ஆற்காட்டில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி இவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இரண்டு நாட்களாக உஸ்மான் ஷரீப் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து அவரது அண்ணன் முன்னாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அவர் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உஸ்மான் ஷரீப் மின்விசிறியில் தூக்கில்பிணமாக தொங்கினார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story