திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன்(வயது 42). இவருடைய மனைவி சுவிதா. மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளாக வௌிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மணிகண்டன் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது கணவன் -மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுவிதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story