கடை முன்பு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கடை முன்பு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

சோளிங்கர் வாரச்சந்தை கடை முன்பு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக வாரச்சந்தை கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு கடையின் முன்பு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சென்று பிணத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் தொங்கியவர் சோளிங்கர் கணபதி முதலி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முகமதுஅலி கூலி என்பது தெரிய வந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story