கோட்டூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோட்டூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
கோட்டூர் அருகே கரியாஞ் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 50) இவர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சரஸ்வதி என்பவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கரியாஞ் செட்டிபாளையத்தில் ஒருவர் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான குருசாமி சரிவர வேலைக்கு செல்லாததால் தோட்ட உரிமையாளர் அவரைவேலை விட்டு நிறுத்திவிட்டார். முன்னதாக, அவரை சந்திக்க அடிக்கடி வரும் மகன் சூரியகுமாரிடம் என்பவரிடம் எனக்கு வாழ்வதற்கே விருப்பம் இல்லை என்று புலம்பிவந்துள்ளார். இந்தநிலையில் பாலாற்றின் நடுவே உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு குருசாமி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story