மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகவள்ளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த மணி, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளார். இதனால் அடிக்கடி வீட்டுக்கு மதுகுடித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி மணியின் வீட்டு கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்தபோது மணி அங்கு அசைவு இன்றி உயிாிழந்து கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணி மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.