விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை

தாயில்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள கனஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 23). தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்தீஸ்வரி. இவர் உடல்நலக்குறைவால் அவ்வப்போது அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேலைக்கு சென்ற கார்த்தீஸ்வரிக்கு கணேஷ்குமார் போன் செய்து தான் உடல் நல குறைவு காரணமாக விஷம் குடித்து விட்டதாக கூறினாா். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தீஸ்வரி, கணேஷ் குமாரின் சகோதரர் துரைராஜ் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது கணேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கார்த்தீஸ்வரி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.