அம்மாபேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


அம்மாபேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

அம்மாபேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் புலேரிக்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. அவருடைய மகன் மாரியப்பன் (வயது 29). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவருக்கும், ராசிகா (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு நேரம் சரியில்லை என்பதற்காக ஓரியாகணவனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். அப்போது கடன் பிரச்சினை காரணமாக மாரியப்பனுக்கும், ராசிகாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாரியப்பன் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் ஒயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த ராசிகா அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story