பளுகல் அருகேமனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை


பளுகல் அருகேமனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை
x

பளுகல் அருகேமனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பூம்பள்ளிகோணம் பகுதியை சேர்ந்தவர் வினுகுமார் (வயது46), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வினுகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு மது வாங்கி வந்து குடித்துள்ளார். இதைப்பார்த்த அவரது மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த வினுகுமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story