ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை


ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலம் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவரிடம் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து வெங்கடாசலம், கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனால் மனமுடைந்த அவர் உப்பாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story