தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
போளூர்
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்த ஏழுமலை தொடர்ந்து பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் வெறுத்த ஏழுமலை, இனி உயிரோடு இருக்க மாட்டேன் என அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்து ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.
.இது குறித்து அவரது மனைவி லட்சுமி புகாரின் பேரில், போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.