வெண்ணந்தூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி


வெண்ணந்தூர் அருகே  டிராக்டர் மோதி தொழிலாளி பலி
x

வெண்ணந்தூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி

நாமக்கல்

வெண்ணந்தூர்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). இவர் வெண்ணந்தூர் அருகே அனந்தகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சின்னசாமி ஜவ்வரிசி கலத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னசாமியை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சின்னசாமி மனைவி ஜெயமணி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story