சங்ககிரி அருகே தொழிலாளர் விபத்தில் பலி
சங்ககிரி அருகே தொழிலாளர் விபத்தில் பலியானார்.
சங்ககிரி
சேலம் அருகே திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் அர்சுனன் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (23). நண்பர்களான இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 10-ந் தேதி இவர்கள் இருவரும் பழனிக்கு சென்று வர முடிவு செய்து, ஒரே மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து பழனிக்கு புறப்பட்டு சென்றனர். சங்ககிரி அருகே ஐயங்காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அர்சுனன், ஞானசேகர் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அர்சுனன் பரிதாபமாக இறந்தார். சேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.