சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு


சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 July 2023 9:15 PM GMT (Updated: 20 July 2023 9:15 PM GMT)

கோத்தகிரி அருகே சாலையில் விழுந்து கிடந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நீலகிரி

கோத்தகிரி

நேபாள நாட்டை சேர்ந்த தேவ் என்பவரது மகன் டம்பார் தாமி (வயது 20). இவருடைய மனைவி தனதானி. இவர்களது மகன் வீரேந்தர். இந்தநிலையில் டம்பார் தாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை தேடி கோத்தகிரிக்கு வந்து, ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் அவருடன் வந்த உறவினர் ஊட்டியில் வேறு வேலை தேடலாம் எனக் கூறி ஊட்டிக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று ஊட்டிக்கு பஸ்சில் புறப்பட்டு வருவதாக டம்பார் தாமி உறவினருக்கு செல்போனில் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே கோத்தகிரி-குன்னூர் சாலை தனியார் கல்லூரி அருகே சாலையோரம் அவர் தலையில் காயத்துடன் விழுந்து கிடந்தார். உடனே வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி டம்பார் தாமி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த கோத்தகிரி பகுதியில் பணிபுரிந்து வரும் நேபாள நாட்டு தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடந்து செல்லும்போது கால் தவறி கல்லின் மேல் தலை மோதி காயமடைந்து இறந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story