சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே சிங்கையன்புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயநரசிம்மன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி தனது மொபட்டில் வீட்டில் இருந்து புறப்பட்டு, வடபுதூரில் மனைவி ரங்கம்மாளை அழைத்து வருவதற்காக சென்றார். சிங்கையன் புதூர்-கிணத்துக்கடவு சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற நபர் மீது மொபட் மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்த ஜெயநரசிம்மன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நேற்று சிகிச்சை பலனின்றி ஜெயநரசிம்மன் இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.