விஷம் குடித்து தொழிலாளி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வம் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 21-ந் தேதி காலை செல்வம் வீட்டில் வாந்தி எடுத்து கொண்டிருந்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக தனது தாயிடம் கூறினார். இதனையடுத்து அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story