தொழிலாளி சாவு
தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரூர்
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 41). ெதாழிலாளியான இவருக்கு, திருமணமாகி கவிதா என்ற மனைவியும் உள்ளார். இந்தநிைலயில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதால், கவிதா தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி சம்பவத்தன்று நிலைதடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story