காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு


காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்

ஆலாந்துறை

ஆலாந்துறை அருகே காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலி தொழிலாளி

கோவை ஆலாந்துறை அருகே மத்வராயபுரம், முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப்தனபால் (வயது 40). இவர் பூண்டி கோவிலில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி (35) என்ற மனைவியும், ஆரோக்கிய ரோசி (8) என்ற மகளும் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், கடந்த 9 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவர் அதே பகுதியில் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.

யானை தாக்கி சாவு

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பூண்டி கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூண்டி செல்லும் ரோட்டில் ஒருபுளியமரம் அருகே நடந்து வந்தபோது, அங்கு நின்றிருந்த காட்டு யானை அவரை தாக்கியது.

இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற சிலர், பிணமாக கிடந்த அவரை பார்த்து வனத்துறை மற்றும் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இந்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில்,அவரை காட்டுயானை தாக்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story