சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே குணமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிதாக மொபட் வாங்கினார். இந்த மொபட்டில் நேற்று உளுந்தூர்பேட்டையில் இருந்து குணமங்கலம் கிராமத்திற்கு குமார் புறப்பட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று குமார் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story