சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (வயது 48). இவர் ஒரு பைப் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று மாலை வடகாட்டில் இருந்து ஆவணம் கைகாட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பிச்சையை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story