சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 53). தொழிலாளி. சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு இவா், தனது மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னசேலம் அண்ணா நகர் நிழற்குடை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே சின்னசேலத்தைச் சேர்ந்த கலியன் மகன் சின்ராசு என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும், முஸ்தபா மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முஸ்தபா சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இறந்த முஸ்தபாவின் மகன் முகமது ராஜா சின்னசேலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story