தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.
அரியலூர்
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்த அன்புராஜின் மகன் தனசேகர்(வயது 35). இளநீர் வியாபாரியான இவரும், இவரது நண்பர் சாமிதுரை மகன் நடராஜ் என்பவரும் சேர்ந்து வியாபாரம் செய்வதற்காக அய்யூர் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரின் வயலில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது தனசேகர் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு சென்று தனசேகரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story