மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மெட்ராத்தியை சேர்ந்தவர் மணி (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் கோமங்கலம்புதூரில் தனது நண்பர் முத்துக்குமார் என்பவருடன் நேற்று கட்டிட வேலை செய்து வந்தார். இதற்கிடையில் திடீரென்று தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வீட்டிற்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். உடுமலை ரோட்டில் தனியார் கல்லூரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த கோமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story