மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.

புதுக்கோட்டை

திருச்சி பொன்மலை அருகே நத்தமாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர், மாத்தூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜா நேற்று முன்தினம் மலம்பட்டியில் உள்ள அவரது நண்பர் வீட்டு விசேஷத்திற்கு ஒரு மொபட்டில் சென்று விட்டு மீண்டும் இலுப்பூர்-மாத்தூர் சாலையில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே அவர் சென்றபோது திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜா தலையில் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story