மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
x

வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 45), தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் வந்தவாசியை அடுத்த பிருதூர் பைபாஸ் ரோட்டில் சென்னாவரம் அருகே செல்லும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனுவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story