மோட்டார் சைக்கிள் உரசியதில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் உரசியதில் கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.
ஆற்காடு
மோட்டார் சைக்கிள் உரசியதில் கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (வயது 50). இவர் ரத்தனகிரியை அடுத்த பெருமுகையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை மேல்விஷாரத்திலிருந்து பெருமுகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பூட்டுத்தாக்கு அருகே சென்றபோது குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது அன்சர் பாஷா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உரசியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அன்சர்பாஷா தலையில் பலத்த காயம் அடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.