மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
நெல்லை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
திருநெல்வேலி
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள அனவரதநல்லூர் சமத்துவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் மகன் அந்தோணி (வயது 30). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலையில் நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் வந்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரத்தை அடுத்து தேர்முட்டி முக்கு பகுதியில் சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்ததாகவும், அதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்தோணி ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story