மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
வந்தவாசி
மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
வந்தவாசியை அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது) 46). இவர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து மோட்டார்சைக்கிளில் நம்பேடு கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, வீரம்பாக்கம் புதூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது மோட்டார்சைக்கி் நிலைதடுமாறி ஓடியதில் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கோபியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கோபி இறந்து விட்டார். இதுகுறித்து கோபியின் மகன் சந்துரு அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






