மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.

அரியலூர்

வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ரமேஷ் அரசலூரிலிருந்து மூலக்காடு செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story