குளியல் அறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி சாவு


குளியல் அறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி சாவு
x

குளியல் அறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கந்தம்பாளையம் அருகே அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 52). தொழிலாளி. இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரங்கசாமியின் மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story