டிப்பர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி பலி
டிப்பர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.
ஆற்காடு
டிப்பர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வெட்டியான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் முனிராஜ். இவர் கிருஷ்ணகிரியில் இருந்து வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தார்.
வேனில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த கோழிகளை ஏற்றும் தொழிலாளர்களான வீராசாமி (வயது 26), சென்றாயன் (33) ஆகியோர் கோழிகளை இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தனர்.
வேன் ஆற்காட்டை கடந்து ரத்தினகிரியை கடந்து அரப்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது மோதி வேன் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே வீராசாமி பலியானார். படுகாயம் அடைந்த டிரைவர் முனிராஜ், சென்ராயன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.