மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் அரசன் என்ற செல்வம் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மூங்கில் மரக்கிளையை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறினார். அப்போது, அங்குள்ள ஒரு மின்கம்பியில் செல்வத்தின் கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர் அவரை பரிசோதனை செய்ததில் செல்வம் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story