விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:26 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிாிழந்தாா்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் வீரமணி (வயது 32). டைல்ஸ் பதிக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீரமணி சீ.கீரனூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் எந்திரம் மூலம் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story