புகை கூண்டு விழுந்து தொழிலாளி சாவு


புகை கூண்டு விழுந்து தொழிலாளி சாவு
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபால் (வயது 55). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் மீது அங்குள்ள புகை கூண்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story