விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x

விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள அயன் திருவாலீஸ்வரம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணபிரான் மகன் பொன்பாண்டி (வயது 36) லாரி டிரைவர். இவர் கடந்த 8-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சென்றபோது அந்த வழியாக அம்பை நகராட்சி குடிநீர் விஸ்தரிப்பு (அம்ருத்) திட்டப்பணியில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த ஹசன் என்பவரது மகன் ரோஹித் (25) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். இருவரது மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த இருவரும் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரோஹித் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story