தொழிலாளி மர்ம சாவு


தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முனைஞ்சிப்பட்டி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பரசி (வயது 43). முதல் கணவர் இறந்து விட்டதால் இரண்டாவதாக கேரளாவைச் சேர்ந்த சுகேஷ் (48) என்பவரை திருமணம் செய்திருந்தார். சுகேஷ் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அன்பரசி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் மற்றும் 2-வது கணவருக்கு பிறந்த மகள் ஆகியோரது படிப்புக்காக நாகர்கோவிலில் வசித்து வருகிறார். சுகேஷ் திருமலாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அன்பரசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினார்கள். மேலும் இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் பூட்டி இருந்த வீட்டை திறந்து உள்ளே பார்த்தபோது சுகேஷ் பிணமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகேஷ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story