தொழிலாளி மர்ம சாவு


தொழிலாளி மர்ம சாவு
x

திருப்பனந்தாள் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த மனக்குன்னம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது45). தொழிலாளி. இவருடைய எதிர் வீட்டில் வசிப்பவர் செந்தில்குமார் (41). இவருடைய வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டுக்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆடுகள் மேய்ந்தபோது ராமலிங்கமும், அவருடைய மனைவி காந்திமதியும் செந்தில்குமாரிடம் சென்று, ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறினர்.

திடீர் சாவு

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் ராமலிங்கத்தை செந்தில்குமார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கிராம மக்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமலிங்கம் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story