என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு


என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு
x

என்.எல்.சி. தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.

கடலூர்


மந்தாரக்குப்பம்,

நெய்வேலி 19-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன்(வயது 57). என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி. கணேசன் நேற்று முன்தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்திற்கு சென்றார். சுரங்கம் நுழைவு வாயிலில் விரல்ரேகை பதிவு செய்து விட்டு சுரங்கத்திற்குள் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைபார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி அறிந்த கணேசனின் உறவினர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், கணேசனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த என்.எல்.சி. நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச. மற்றும் அண்ணா தொ.மு.ச. ஆகிய தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் 3 மாதத்திற்குள் கணேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையேற்ற கணேசனின் உறவினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story