விபத்துகளில் தொழிலாளி-டிரைவர் பலி


விபத்துகளில் தொழிலாளி-டிரைவர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி-டிரைவர் உயிரிழந்தனர்.

திருச்சி

கார் மோதி சாவு

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 50). கூலி வேலை செய்து வந்த இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் மண்ணச்சநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- துறையூர் சாலையில் பூனாம்பாளையம் ரைஸ்மில் அருகே சென்றபோது ஸ்ரீரங்கத்தில் இருந்து துறையூர் நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(54) என்பவரை கைது செய்தனர்.

டிரைவர்

இதேபோல் திருச்சி சிந்தாமணி பதுவை நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(32). இவர் சிந்தாமணி பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். இந்நிலையில் இவர் திருவானைக்காவலில் இருந்து நம்பர் 1 டோல்கேட் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் உப்பிலியபுரம் கோணக்கரை பகுதியை சேர்ந்த சித்தையன் (56) அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.

அப்போது அந்த பஸ் ஸ்ரீதர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சித்தையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story