விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


விழுப்புரம் அருகே    ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வேலுடையான்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் உதயகுமார் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி மாலை தனது நண்பரான புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த உமாநாத் (35) என்பவருடன் விழுப்புரம் அருகே சொர்ணாவூர் மேல்பாதி அணைக்கட்டில் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது உதயகுமார் திடீரென நீரில் மூழ்கினார். அவரை அவரது நண்பர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று உதயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சொர்ணாவூர் சுடுகாடு அருகில் உதயகுமாரின் உடல் கரைஒதுங்கியது. பின்னர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story