ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
அருமனை அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
கன்னியாகுமரி
அருமனை,
அருமனை அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் (வயது 56), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும், பென்சிகருக்கு மது பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் நேற்று முன்தினம் மாலையில் திருவரம்பு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க இறங்கினார். அப்போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் இறங்கி பென்சிகரை தேடினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பென்சிகர் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story