வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்


வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
x

வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்த மணிகண்டன் (வயது 33) என்பவரை தேயிலை தோட்டத்திற்குள் படுத்துக்கிடந்த காட்டெருமை ஒன்று எழுந்து தனது கொம்புகளால் முட்டி தூக்கி வீசியது. இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனை கவனித்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எஸ்டேட் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் தேயிலை தோட்ட தொழிலாளியை காட்டெருமை தாக்கிய சம்பவம் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்கும் போது அந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிந்து தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டெருமை தாக்கி படுகாயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனுக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள் இயக்குனர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் பேரில் துணை கள இயக்குனர் கணேசன் அறிவுரையின் பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.


Next Story