மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2023 1:00 AM IST (Updated: 30 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே உள்ள சீலியூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 47). கட்டிட தொழிலாளி. இந்த நிலையில் சண்முகசுந்தரம் நேற்று மேஸ்திரி ராமசாமி, ராஜா ராபர்ட் ஆகியோருடன் மருதூர் சந்தைக்கடை தோட்டத்தில் சுகந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சண்முகசுந்தரத்தின் கை மின் ஒயரில் பட்டதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் கட்டிட உரிமையாளர் வீரபத்திரசாமி (54), அவருடைய மனைவி சுகந்தி (47) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story