சாலை விபத்தில் தொழிலாளி படுகாயம்


சாலை விபத்தில் தொழிலாளி படுகாயம்
x

சாலை விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தனர்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள டி.இடையபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). தொழிலாளியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அழகனாம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது திருச்சியில் இருந்து தோகைமலை நோக்கி திருச்சி மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த மாதையன் (45) என்பவர் ஓட்டி வந்த கார், சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கார் டிரைவர் மாதையன் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story