கட்டிலில் படுத்திருந்த தொழிலாளி கொலை


கட்டிலில் படுத்திருந்த தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:46 PM GMT)

பேரையூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மதுரை

பேரையூர்,

பேரையூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் பேரையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைக்காளி. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சங்கர், அழகர் என்ற மகன்கள்.

இவர்கள் அனைவருமே கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். நேற்று பிச்சை காளியின் இளைய மகன் அழகர் (வயது 22) கட்டிட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மற்றவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். நேற்று மாலையில், 3 வாலிபர்கள் திடீரென கத்தி மற்றும் அரிவாளுடன் அழகரின் வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் வீட்டில் படுத்து இருந்த அழகரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அழகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மோப்பநாய்

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், பேரையூர் துணை சூப்பிரண்டு இலக்கியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அழகரின் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலையாளிகளை தேடிவருகின்றனர். வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story