மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
வந்தவாசி
கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரபாகரன் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற பிரபாகரன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் வேலை செய்து வந்த நிலத்தில் உள்ள மின்மோட்டார் அறையில் பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து பொன்னூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பிரபாகரனின் காலில் மின் வயர் சுற்றிய நிலையில் இருந்தது. எனவே மின்சாரம் தாக்கி அவர் இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிரபாகரனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.