மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆராத்திரிவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திலகவதியும் அதே கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தொழிலாளியான பிரகாசம் தனது வீட்டின் மாடியில் நின்று கொண்டு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் உள்ள மாங்காய்களை தனது தம்பி மோகனுடன் சேர்ந்து பறித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மரத்தின் மேல் பகுதியில் இருந்த மின்சார ஒயரில் பிரகாசத்தின் கைபட்டதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்த பிரகாசத்தை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திலகவதி மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story