நீராவி தாக்கி தொழிலாளி பலி


நீராவி தாக்கி தொழிலாளி பலி
x

மோகனூர் அருகே கருவாட்டு மில்லில் நீராவி தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

மோகனூர்

தொழிலாளி

மோகனூர் அருகே உள்ள வளையபட்டி தனியார் கருவாட்டு மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் (வயது 30) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கருவாட்டு மில் உரிமையாளர் கோவிந்தசாமி மகன் விக்ரம் (19) ஆகிய 2 பேரும், கருவாடு வேகவைக்கும் எந்திரத்தில் கருவாடை வேக வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கருவாடு எடுக்க மூடியை திறந்தபோது எதிர்பாராத விதமாக நீராவி தாக்கியதில் அர்ஜுன், விக்ரம் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அர்ஜுனனை சேலம் அரசு மருத்துவமனையிலும், விக்ரமை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சாவு

இந்தநிலையில் அர்ஜுன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story