ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
சேலம்
ஆத்தூர்:-
ஆத்தூர் புதுப்பேட்டை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆராவமுதன் (வயது 45). இவர் வ.உ.சி. நகர் பகுதியில் ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளைக்காக சென்று விட்டு ஆத்தூர் புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ெரயில் அந்த வழியாக சென்றது. ரெயில் வருவதை கவனிக்காத ஆராவமுதன் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஆராவமுதன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான ஆராவமுதனுக்கு ஆனந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story