பஸ் மோதி தொழிலாளி பலி


பஸ் மோதி தொழிலாளி பலி
x

வள்ளியூரில் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் ஊத்தடியைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 55). கூலி தொழிலாளி. இவர் வள்ளியூர் தெற்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருணாநிதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் கருணநிதி உயிரிழந்தார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story